×

சேரன்மாகதேவியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வீரவநல்லூர்,செப்.22: சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குநர் சுந்தரேசன், ஆலோசனைக்குழு உறுப்பினர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தனர். சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் காதர், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், செய்யது சுலைமான், பூங்கொடி ஆகியோர் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் எல்லைக்குட்பட்ட கிராமங்கள் முழுவதும் நிலவேம்பு குடிநீர் மற்றும் 1 லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் தொடங்கப்பட்டது. இதில் கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post சேரன்மாகதேவியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Cheranmagadevi ,Veeravanallur ,Cheranmahadevi ,Cheranmahadevi Sub-Collector's Office ,Gopalasamutram Village Udayam ,
× RELATED சேரன்மகாதேவியில் குண்டாசில் வாலிபர் கைது