×

அரசு பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு

பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, பாப்பாரப்பட்டி அடுத்த பனைகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், மாணவர்களுக்கு குடிநீர் வழங்க சின்டெக்ஸ் டேங்க் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை, இந்த டேங்க்கில் கடும் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து பள்ளியின் ஆசிரியர் கணேசன், சின்டெக்ஸ் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தார். அப்போது தொட்டியில் உள்ள தண்ணீரில் மனித கழிவு கலந்திருப்பது தெரியவந்தது. இதனை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக சின்டெக்ஸ் தொட்டியின் தண்ணீரை வெளியேற்றினர். இதுகுறித்து தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார், பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் மற்றும் அலுவலர்கள், பள்ளியில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரசு பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு appeared first on Dinakaran.

Tags : Paparapatti ,Dharmapuri district ,Bennagaram taluka ,Panaikulam Panchayat union middle school ,
× RELATED 40 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்