×

நிலக்கோட்டையில் சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடி அடையாள அட்டை

நிலக்கோட்டை, செப். 22: நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
தாசில்தார் தனுஷ்கோடி தலைமை வகித்தார். முகாமில் 35 கிலோ அரிசி, வீட்டு மனைக்கான இலவச பட்டா, ஊக்கத்தொகை, வங்கி கடன் உதவி வேண்டி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். மேலும், ஒன்றிய அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க வேண்டி மனு அளித்தனர்.

சமூக நலத்துறை தனி தாசில்தார் ஆறுமுகம் மனுக்களை பெற்றனர். முகாமில் பல்வேறு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அந்த இடத்திலேயே உடல் நிலைக்கேற்ப அடையாள அட்டை வழங்கினர். முகாமில், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

The post நிலக்கோட்டையில் சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடி அடையாள அட்டை appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Revenue and Disaster Management Department ,Nilakottai Taluk Office ,Dinakaran ,
× RELATED தொடர்மழை காரணமாக பூத்துக் குலுங்கும்...