×

பெண் சார்பதிவாளர் வீட்டில் விஜிலென்ஸ் சோதனை

ஆலங்குளம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த அரிநாராயணன் மனைவி ஆனந்தி (47). இவர் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலையில் சார்பதிவாளராக பணியாற்றினார். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிஏசிஎல் என்ற தனியார் நிதி நிறுவனம் ₹45 ஆயிரத்து 185 கோடி வசூலித்து, நிலங்களை விற்பனை செய்வதில் முறைகேடாக பத்திரம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ஆனந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இதற்கிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆனந்தி மீது ெநல்லை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் சென்றுள்ளது. இதன் பேரில் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து, ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் உள்ள ஆனந்தியின் வீட்டில் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெய, எஸ்ஐ ரவி உட்பட 10 பேர் அடங்கிய குழுவினர் நேற்று காலை 8 மணி முதல் திடீரென சோதனை நடத்தினர்.

சோதனையின் போது வீட்டிற்குள் யாரையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அனுமதிக்கவில்லை. இந்த சோதனை மாலை 5 மணி வரை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

The post பெண் சார்பதிவாளர் வீட்டில் விஜிலென்ஸ் சோதனை appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Arinarayan ,Anandi ,Maruthamputhur ,Tenkasi district ,Dinakaran ,
× RELATED ஆலங்குளம் அருகே கோயில் கொடை விழா...