×

வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கி கைதான பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை: காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் சாகம் செய்ய முயன்று விபத்தில் சிக்கிய சம்பவத்தில் தற்போது சிறையிலுள்ள வாசனுக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மறுத்து உத்தரவிடப்பட்டது. காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் பிரபல யூடியூப்பர் டி.டி.எஎப் வாசன் பைக் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் மீது பாலுச்செட்டிசத்திரம் போலீசார் ஐந்து பிரிவின் கீழ், வழக்குப்பதிவு சிறையில் அடைத்தனர். இந்நிலையில் டிடிஎப் வாசனின் ஜாமீன் மனு மீதான விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி செம்மல் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் டிடிஎப் வாசன் தரப்பு வழக்கறிஞர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர். அப்போது டிடிஎப் வாசன் மீது ஏராளமான போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் உள்ளதென்றும், தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கூட இவர் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் உள்ளதால், அவருக்கு ஜாமீன் அளிக்ககூடாது என அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் வாதிட்டார்.

மேலும் டிடிஎப் வாசன் பல்வேறு இடங்களில் வீலிங் சாகசம் நிகழ்த்திய சிசிடிவி காட்சிகளையும், விபத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகளையும் நீதிபதி முன்பு ஆதரங்கள் முன் வைக்கப்பட்டது. வீலிங் சாகசம் செய்து பணம் சம்பாதிப்பதற்காக யூடியூப் பக்கத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து ஆதாயம் தேடுவதோடு அப்பாவி இளைஞர்களை கவர்ந்து தவறான பாதையில் வழிநடத்தி செல்லும் இவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, அவரது வாகன உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். இதனையடுத்து டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் அளிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து, அவரது ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்தார்.

The post வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கி கைதான பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : TDF Vasan ,Chennai ,Chennai-Bangalore ,Kanchipuram ,
× RELATED ரசிகர்களுக்கு பேரிடி: பிரபல யூடியூபர்...