×

பாக்சிங் நடக்கும் இடம், நேரத்தை அறிவித்தால் வருகிறேன் எனக்கு சவால் விட்ட நபர் என் கையால் சாக முடிவெடுத்துள்ளார்: சீமான் ‘திடுக்’ பேட்டி

சென்னை: செங்கல்பட்டு மறைமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்‌ நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

பின்னர், சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘தமிழகத்தில் எங்களுடைய வளங்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். ஆனால் தண்ணீரை வழங்க மறுக்கிறீர்கள். நெய்வேலி மின்சார மேலாண்மை வாரியம், மின்சார ஒழுங்காற்று குழு அமைத்து இந்த ஆட்டத்தை நான் ஆடி காட்டுவேன்.

தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமியின் கணவர் பாக்ஸிங்கிற்கு அழைத்தது குறித்து கேட்டபோது, அவர் பகலில் பேசினால் பாக்ஸிங்கிற்கு போகலாம், ஆனால் அவர் 7-மணிக்கு மேல் பேசுகிறார். அதனால் என் செல்போனை அணைத்தேன். அவர் என் கையால் தான் சாவது என முடிவெடுத்தால். நான் அதனை எதிர்கொள்கிறேன். அவரிடம் கேட்டு சொல்லுங்கள் எந்த இடம், நேரம் சொன்னால் எப்போது வேண்டுமானாலும் வருகிறேன் என்றார்.

The post பாக்சிங் நடக்கும் இடம், நேரத்தை அறிவித்தால் வருகிறேன் எனக்கு சவால் விட்ட நபர் என் கையால் சாக முடிவெடுத்துள்ளார்: சீமான் ‘திடுக்’ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Seeman ,CHENNAI ,Chengalpattu Karamalai ,Naam Tamilar Party ,Chengalpattu ,Tiruporur ,Assembly ,
× RELATED மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம்...