×

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 32 ஆண்டு கடுங்காவல் தண்டனை: மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த குன்னவலம் கிராமத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு, 32 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. திருவள்ளூர் அடுத்த குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரது மகன் பாலசுப்பிரமணி (எ) பாலா (23). பிளஸ் 2 வரை படித்திருந்த பாலசுப்பிரமணி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், பிளஸ் 2 முடித்து பள்ளி விடுமுறை காலத்தில் இதே ஊரை சேர்ந்த சேர்ந்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அந்த சிறுமியிடம் பாலசுப்பிரமணி நட்பாகப் பழகியுள்ளார். கடந்த 26.2.20 அன்று வீட்டில் இருந்த மகள் திடீரென காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், காணாமல் போன மறுநாள் சிறுமி கனகம்மாசத்திரம் போலீசில் சரண் அடைந்தார். இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், குன்னவலம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (எ) பாலா நகரிக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தததாகவும், அங்கிருந்து தப்பித்து பேருந்து ஏறி வந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் 28.2.20ல் இது குறித்து வழக்குப் பதிவு செய்து பாலசுப்பிரமணி (எ) பாலாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் 13.3.2021ல் விசாரணைக்கு வந்தது. மேலும், அரசு தரப்பில் அமுதா என்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ராதேவி ேநற்று பின்னர் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: அதில், 17 வயது சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7,000 அபராதமும், கட்டத்தவறினால் 6 மாதம் கூடுதல் சிறை தண்டனையும், சிறுமியை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,000 அபராதமும், கட்டத்தவறினால் 6 மாதம் கூடுதல் சிறை தண்டனையும்,

கடத்தி பாலியல் பலாத்காரம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் என 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், அபராதமாக ரூ.25 ஆயிரத்தை சிறுமியின் குடும்பத்தாருக்கும், 3 ஆயிரம் நீதிமன்றத்திற்கும் செலுத்தவும் உத்தரவிட்டார். இதில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் நீதிபதி சுபத்ரா தேவி பரிந்துரை செய்துள்ளார். இந்த, தீர்ப்புக்குப் பின் பாலசுப்பிரமணி (எ) பாலாவை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 32 ஆண்டு கடுங்காவல் தண்டனை: மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : District Mahila Court ,Tiruvallur ,Kunnavalam ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!