×
Saravana Stores

திருத்தணியில் நாளை தனியார் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு, விளம்பர வாகனத்தினை கலெக்டர் இயக்கி வைத்தார்

திருவள்ளூர்: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ஜி.ஆர்.டி.பொறியியல் கல்லூரியில் நாளை (23ம் தேதி) மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சார விளம்பர வாகனத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் ஸஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜி.ஆர்.டி. பொறியியல் கல்லூரியில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த ராயல் என்ஃபீல்டு, அசோக் லைலாண்ட், பாப்புலர் மெகா மோட்டார்ஸ், மெரேன் இன்ஃபோ ஸ்டரக்ட், எமரால்டு குளோபல், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர், கெவின் இந்தியா, இந்தியா- ஜப்பான் கம்பெனி போன்ற 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.

இம்மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கான விளம்பர வாகனத்தினை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் இம்முகாம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மூன்று நாட்களுக்கு இப்பிரச்சார விளம்பர வாகனம் அப்பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் எனவும் விருப்பமுள்ள வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வுகளில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் க.விஜயா, வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர் காமராஜ் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

The post திருத்தணியில் நாளை தனியார் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு, விளம்பர வாகனத்தினை கலெக்டர் இயக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thirthani ,Thiruvallur ,Thiruvallur, ,Tiruthani, G.M. ,Kutamizarthanam ,Dr ,Tiruvallur ,R.R. TD ,College of Engineering ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...