×

அண்ணா பல்கலை மாணவர்கள் இங்கிலாந்தில் ஓராண்டு படிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம்: பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் ஓராண்டு, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், தங்கள் படிப்பு காலத்தில் ஓராண்டு இங்கிலாந்தில் உள்ள 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றில் படிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து புதிய முறை வழிமுறைகளை உருவாக்குவது குறித்து இங்கிலாந்தில் உள்ள 10 பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்த கலந்தாலோசனை மற்றும் சந்திப்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில் இங்கிலாந்தின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக் கழகம், பிரமிங்ஹாம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 10 முன்னணி பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதற்கு பிறகு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியதாவது:
அண்ணா பல்கலைக் கழகத்தில் பிஇ, பிடெக் பட்டம் படிக்கும் மாணவர்கள் இடைக்காலத்தில் இங்கிலாந்தில் உள்ள மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் 1 அல்லது 2 ஆண்டுகள் படிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை தேர்வு செய்து, அவர்களில் யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்களை லண்டன் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவது அண்ணா பல்கலைக் கழகத்தின் நோக்கம். ஏற்கெனவே இதேபோல மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன் எண்ணிக்கையை 50 முதல் 60 வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இங்கிலாந்து கல்வியாளர் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக் கழகங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துகின்றபோது அது இருநாட்டு உறவுகளை மேம்படுத்த உதவும். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட உள்ளோம் என்றார்.

The post அண்ணா பல்கலை மாணவர்கள் இங்கிலாந்தில் ஓராண்டு படிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம்: பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Anna University ,England ,Chennai ,University of England ,
× RELATED நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற...