×

செங்கல்வராயர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிடிலீ செங்கல்வராயர் கல்லூரியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சாலை விதிமீறல்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசீலன் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த ஊவேரி சத்திரத்தில் உள்ள பிடிலீ செங்கல்வராயர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு செங்கல்வராய நாயக்கர் கல்லூரி அறக்கட்டளையின் தலைவரும், நீதியரசருமான பொன்.கலையரசன் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப கல்வி கழகத்தின் மேனாள் இணை இயக்குனர் அருளரசு, சென்னை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் விஷாலாட்சி, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன், தோழன் தொண்டு நிறுவன நிர்வாகி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார்.

இதில், காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் தனசீலன் கலந்துகொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘சாலைகளில் வாகனம் ஓட்டும்போது சிவப்பு விளக்குகளை மீறி வாகனம் ஓட்டுதல், அலைபேசியில் பேசியபடி வாகனம் இயக்குதல் போன்றவை கடும் சாலை விதிமீறல்கள். பொதுமக்களின் சாலை விதிகளை கடைபிடித்தால் மட்டுமே விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் குறைக்க முடியும்’ என்றார்.

The post செங்கல்வராயர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chengalwarai College ,Kanchipuram ,Kanchipuram Pitlee Chengelvarayar College ,Road Safety Awareness ,Brunkavarai College ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில்...