
- தேசிய ரோபாட்டிக்ஸ் பட்டறை
- ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி
- மதுராந்தகம்
- தேசிய ரோபாட்டிக்ஸ்
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை
- ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி
- தின மலர்
மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில், 2 நாள் தேசிய ரோபோடிக்ஸ் பயிலரங்கம் கல்லூரி அரங்கில் நேற்று தொடங்கியது. இதில், கல்லூரியின் தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் ராஜா, கல்லூரி டீன் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் தயா அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், மும்பை ஐஐடியின் பேராசிரியர் கவி ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இப்பயிலரங்கத்தின் முதல் நிகழ்ச்சியாக பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரிகளின் பல்வேறு துறைகளை சார்ந்த மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ரோபாட்டிக் வானிலை ஆய்வு கருவி, ஏரியின் தண்ணீரில் உள்ள பாசிகளை அகற்றும் கருவி, டிரோன் விவசாயம் மருந்து தெளிப்பான், சோலார் கார், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குபவர்களை எச்சரிக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
இதனை சிறப்பு விருந்தினர் கவி ஆர்யா உள்ளிட்ட பேராசிரியர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து இன்றும் இந்த கல்லூரியில் பயிலரங்கம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், நிர்வாக அலுவலர் சதானந்தம் உள்ளிட்ட பல்வேறு துறை தலைவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் தேசிய ரோபோட்டிக்ஸ் பயிலரங்கம் appeared first on Dinakaran.