
- கிளம்பாக்கம் ரயில் நிலையம்
- சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்
- சென்னை
- கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
- சென்னை…
- சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம்
- தின மலர்
சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த ₹43 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுப்பட்டு வருகிறது. இங்கிருந்து தினசரி 270 பஸ்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையிலும், தினசரி 2,000 பஸ்களை இயக்கும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் முனையம் திறக்கப்பட்ட பின்னர் வெளியூர் பஸ்கள் சென்னை நகருக்குள் வர தடை விதிக்க, சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல இணைப்பு வசதியாக மாநகர பேருந்துகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மெட்ரோ ரயில் சேவையை, சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை விரிவாக்கம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் புதிய ரயில் நிலையம், நடைமேம்பாலம் அமைப்பது போன்ற பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டில் மொத்தம் ₹163 கோடி தேவைப்படும் என்ற தகவலை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது. மேலும், கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் சிஎம்டிஏவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தயாரித்துள்ள திட்ட மதிப்பீட்டில் ரயில் நிலையம் அமைவதற்கான நிலங்களை கையகப்படுத்த ₹43 கோடியும், ரயில் நிலையம் அமைய ₹20 கோடியும், நடைமேம்பாலம் அமைக்க ₹100 கோடி ரூபாய் என மொத்தம் ₹163 கோடி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
The post கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு நிலம் வாங்க ₹43 கோடி தேவை: சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மதிப்பீடு appeared first on Dinakaran.