×

நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை விழிக்க வைக்கும் பணிகள் தொடக்கம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை: நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை விழிக்க வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்து பிரக்யான் ரோவரும் நிலவில் ஆய்வு பணிகளை மேற்கொண்டது. மேலும் லேண்டர் மற்றும் ரோவர் கலனில் உள்ள பிரத்யேக கருவிகள் தனித்தனியாக ஆய்வுகளை மேற்கொண்டன.

இந்நிலையில் நிலவில் இரவு துவங்கியதால் நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டர் கருவிகள் உறக்க நிலையில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், நிலவில் அடுத்த சூரிய உதயம் இன்று நிகழ்கிறது. இதையொட்டி லேண்டர் மற்றும் ரோவர் இன்று உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு செயலாக்கத்துக்கு வரும். சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி, செயல்பாட்டிற்கு வரும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விக்ரம் லேண்டர், ரோவர் மீண்டும் விழித்தெழுந்தால் இன்னும் அதிக தரவுகள் கிடைக்கும்.

The post நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை விழிக்க வைக்கும் பணிகள் தொடக்கம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Lander ,ISRO Scientists ,Chennai ,ISRO ,Chandrayaan- ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...