
சென்னை: ‘‘வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்’’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள வெப்ப சலனத்தால் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று திருப்பத்தூரில் 100 மிமீ மழை பெய்துள்ளது.
இதற்கிடையே, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. சென்னை, ஈரோடு, கரூர், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை காணப்பட்டது.
இந்நிலையில், குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 25ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
The post 11 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.