×

இங்கிலாந்தில் ஐஐடி வளாகம்: பல்கலைக்கழகங்கள் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இங்கிலாந்தில் இந்திய தொழில்நுட்ப கழகத்தை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தான்சானியாவில் மெட்ராஸ் ஐஐடி தனது வளாகமும், அபுதாபியில் டெல்லி ஐஐடியும் தங்களது வளாகத்தை தொடங்க உள்ளன. இந்நிலையில் இங்கிலாந்திலும் ஐஐடி வளாகத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்து இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள், கல்வி தலைவர்களின் பிரதிநிதிகள் குழு தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், ‘‘இங்கிலாந்தில் வெளிநாட்டு ஐஐடி வளாகத்தை அமைப்பதற்காக வரவேற்பதில் இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே ஐஐடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேபோல் இங்கிலாந்தை சேர்ந்த பல பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் தங்களது வளாகத்தை தொடங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளன. இது தொடர்பாக முறையாக பல்கலைக்கழக மானிய குழுவின் இறுதி விதிமுறைகளுக்காக காத்திருக்கிறோம். மலேசியாவில் 5 இங்கிலாந்து பல்கலைக்கழக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்துக்கு இதில் நிபுணத்துவம் உள்ளது” என்றார்.

The post இங்கிலாந்தில் ஐஐடி வளாகம்: பல்கலைக்கழகங்கள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : IIT Campus ,England ,New Delhi ,Indian Institute of Technology ,UK ,Tanzania ,Dinakaran ,
× RELATED மாநில அரசுகளுடன் மோதல் ஆளுநர்கள்...