×

உலக கோப்பைக்கான வங்கதேச ஆலோசகராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்

டாகா: தமிழகத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் ஸ்ரீராம்(47). இவர் உள்நாட்டு தொடர்களில் தமிழ்நாடு, கோவா, மகாராஷ்டிரா, அசாம், இமாச்சல் பிரதேசம், வெளிநாட்டு தொடர்களில் ஸ்காட்டிஷ் சால்ட்யர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடிய சுழற் பந்து வீச்சாளர். மேலும் இந்திய அணிக்காக 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலியா ஏ, வங்கதேச டி20 அணிகளுக்காகவும், ஐபிஎல் தொடர்களில் பெங்களூர் அணிக்காகவும் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். இந்தியரை ஆலோசகராக ஆஸியே நியமித்த வரலாறையும் ராம் தான் நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் உலக கோப்பைக்கான வங்கதேச அணியின் ஆலோசகராக ராமை நியமித்தே ஆக வேண்டும் என்று கேப்டன் ஷாகிப் அல் அசன் அடம் பிடித்துள்ளார்.

ராம் ஏற்கனவே சில மாதங்கள் மட்டுமே வங்கதேச அணிக்காக பணியாற்றி உள்ளார். அதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தயங்கி உள்ளது. ஆனால் ஸ்ரீராமின் திறமைகளை பட்டியலிட்ட ஷாகிப், கூடவே வங்கதேச அணி தொடர்ந்து சொதப்பி வருவதையும் வாரியத்திடம் சொல்லியுள்ளார். அணியின் இப்போதைய பயிற்சியாளர் சந்திக அதுருசிங்க(இலங்கை) தனியாளாக அணியை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அதனால் ஸ்ரீராமின் அவசியத்தை உணர்ந்த வாரியம், கேப்டன் ஆலோசனைப்படி அவரை ஆலோசகராக நியமித்துள்ளது. இப்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் வங்க அணியுடன் ராம் உடனடியாக இணைகிறார். பிறகு உலக கோப்பையில் விளையாடும் வங்க அணியுடன் இந்தியா வருவார்.

The post உலக கோப்பைக்கான வங்கதேச ஆலோசகராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Sritharan Sriram ,Bangladesh ,World Cup ,Tamil Nadu ,Goa ,Maharashtra ,Assam ,Imachal Pradesh ,Overseas ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...