×

சிவப்பு சட்டை, தலையில் பெட்டியுடன் ரயில்வே போர்ட்டராக மாறிய ராகுல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ரயில்வே போர்ட்டர் போல உடையணிந்து அவர்களுடன் கலந்துரையாடினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்பியான ராகுல்காந்தி, சமீப நாட்களாக பல்வேறு தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். மே மாதம் அவர், டெல்லியில் இருந்து லாரி மூலமாக பயணத்தை மேற்கொண்டார். லாரி ஓட்டுனர்கள் சந்திக்கும் பிரச்னைகளை அப்போது அவர் கேட்டறிந்தார். பின்னர் வயலில் வேலை செய்யும் விவசாயிகளுடன் விவசாயிகளாக இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். சமீபத்தில் லடாக்கில் பல்வேறு சமூக குழுக்களுடன் ராகுல் உரையாடினார்.

இந்நிலையில் ராகுல்காந்தி நேற்று டெல்லி ஆனந்த்விகார் ரயில் நிலையத்துக்கு சென்றார். அங்குள்ள போர்ட்டர்களை சந்தித்தார். அவர்களோடு ஒன்றாக அமர்ந்து அவர்களது பிரச்னைகள், குறைகளை கேட்டறிந்தார். பின்னர் போர்ட்டர்கள் அணிவது போன்று சிவப்பு சட்டயை அணிந்து கையில் பேட்ஜ் அணிந்தார். பின்னர் தலையில் பெட்டியை வைத்து சுமந்து சென்றார். போர்ட்டராக மாறிய ராகுலின் புகைபடத்தை காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், ‘‘மக்களின் ஹீரோ ராகுல்காந்தி அவரது போர்ட்டர் நண்பர்களை டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் சந்தித்து பேசினார். ராகுலை சந்திக்க விரும்புவதாக போர்ட்டர் நண்பர்கள் பதிவிட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. ராகுல் அவர்களோடு அமர்ந்து பேசினார். இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சிவப்பு சட்டை, தலையில் பெட்டியுடன் ரயில்வே போர்ட்டராக மாறிய ராகுல் appeared first on Dinakaran.

Tags : Rahul ,New Delhi ,Former ,Congress ,president ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...