- கும்பாபிஷேம்
- Kummidipundi
- ஸ்ரீ போமி நீலதேவி
- சமேதா பிரசன்ன வெங்கடேச பெருமாள்
- வள்ளி-தேவசேனா சமாதா சுப்ரமண்ய
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ பூமி நீலாதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் பிரசன்ன ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 13ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. நேற்று ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, மகா அபிஷேகமும், எஜமான சங்கல்பம், அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, ரக்க்ஷா பந்தன நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று அதிகாலை மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தனம் சாற்றுதல், மகா சாந்தி திருமஞ்சனமும், மகா பூர்ணாஹுதி யாத்ராதான நிகழ்ச்சிகள் நடந்தன.
இதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து சென்ன பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையில் புனித நீருடன் கோயில் ராஜகோபுரத்தை வலம் வந்து, காலை 9 மணியளவில் 25 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் இரவு 7 மணியளவில் வள்ளி தேவசேனா சுப்பிரமணியக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
The post ஆரம்பாக்கத்தில் இன்று 25 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.