×

ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு நாட்டில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு

டெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு நாட்டில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது என்று ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படியே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி நடத்தபடுகிறார்கள். அரசியல் அமைப்பு மீறல் எதுவும் நடக்கவில்லை என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பேசினார். குற்றச்சாட்டை முன்வைக்கும் காங். எம்.பி. முதலில் வீட்டுப்பாடத்தை முறையாக படித்து வாருங்கள் என்றார். புதிய நாடாளுமன்ற திறப்பில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அழைக்கப்படாதது தொடர்பான குற்றச்சாட்டுக்கு தன்கர் பதில் அளித்தார்.

The post ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு நாட்டில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : President ,Vice President ,Rajya ,Sabha ,Speaker ,Jagadeep Dhankar ,Delhi ,Jagadeep Thankar ,Dinakaran ,
× RELATED ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு ரூ.13.50...