×

திண்டுக்கலில் கருகல் நோய் தாக்கியதால் மல்லிகைப் பூ சாகுபடி பாதிப்பு: உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மல்லிகை பூக்களில் கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு, நிலக்கோட்டை மற்றும் சிவன்கோவில்மேடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மல்லிகை பூ சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மல்லிகை பூக்களை ஒரு வித கொசுக்கள் தாக்கி வருகின்றன.

இதனால் மல்லிகையில் கருகல் நோய் ஏற்பட்டு பூ மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மல்லிகை பூவை தாக்கியுள்ள பூச்சிகளை ஒழிக்க பல்வேறு மருந்துகள் கொடுத்தும் உரிய தீர்வு கிடைக்காததால் செய்வதறியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளன. தொடர்ப்பூச்சி தாக்குதலால் மல்லிகை பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பூச்சி தாக்குதல் பிரச்சனைக்கு அரசு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திண்டுக்கலில் கருகல் நோய் தாக்கியதால் மல்லிகைப் பூ சாகுபடி பாதிப்பு: உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : DINDUGUKAL ,Dindugul district ,Nalakotta ,Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே விளை...