×

ஜாவா 42 பாபர்

ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம், பிளாக் மிரர் வேரியண்ட் ஜாவா 42 பாபர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. பைக் முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்தாலும், பெட்ரோல் டேங்கில் குரோம் பூச்சு மற்றும் டயமண்ட் கட் அலாய் வீல்கள் இடம் பெற்றுள்ளன. பாபர் 42 வரிசையில் இது டாப் வேரியண்டாகும். இதில் 334 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 29.49 பிஎச்பி பவரையும், 32.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஆர்பிஎம்-ஐ பொறுத்தவரை 1,500ல் இருந்து 1,350 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பின்புறம் இடம் பெற்றுள்ள மோனோ ஷாக் அப்சர்வர், சொகுசான ரைடிங் அனுபவத்துக்கு ஏற்ப சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.2.25 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற வண்ணங்களை விட இது சுமார் ரூ.10,000 முதல் ரூ.12,000 அதிகமாகும்.

The post ஜாவா 42 பாபர் appeared first on Dinakaran.

Tags : Java Motorcycle Company ,
× RELATED ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய...