×

மகளிருக்கான 33% சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

சென்னை: வரலாற்று சிறப்புமிக்க மகளிருக்கான 33% சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பாக மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு நிலைகளில் மகளிர்க்கான இட ஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாத நிலையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்க தக்கது. அரசியலிலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பெண்களுக்கு பிரதிநித்துவம் வழங்க வேண்டும். பெண்களுக்கான பிரதிநித்துவம் அதிகமாக வழங்கும்போது சமூகத்திலும், அவர்களுக்கான அடிப்படை உரிமையும் அங்கிகாரமும், கிடைக்கிறது.

இதனால் தன்னம்பிக்கையும், முன்னேற்றமும் ஏற்பட்டு மகளிர் தங்களையும், நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு பாதையில் கொண்டு செல்ல வழிவகுப்பதோடு, இது அவர்களின் வளர்ச்சிக்கு மேலும் ஓர் மைல் கல்லாக அமையும். தற்பொழுது மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால், வருங்காலங்களில், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிர்க்கான பங்களிப்பு அதிகரிக்கும். எதிர்கட்சிகள் இந்த இட ஒதுக்கீட்டை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் மகளிர்க்கு அளிக்கும் உரிமையை, அங்கிகாரத்தை, பகிர்ந்தளிக்கும் நிகழ்வாக பார்க்க வேண்டும், தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் துணை நிற்கும். புதிய பாராளுமன்ற கட்டடத்தில், புதிய தொடக்கமாக வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை கொண்டு வந்த பாரத பிரதமர் மோடிஜி அவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மகளிருக்கான 33% சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு ஜி.கே.வாசன் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : G.P. K.K. ,Vasan ,Chennai ,Tamil State Congress ,G.P. ,K.K. Wassan ,
× RELATED அமலாக்கத்துறையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஜி.கே.வாசன்