
சென்னை: நீட் தேர்வு தகுதியை குறைக்கிறதா? அதிகரிக்கிறதா? என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். முதுநிலை மருத்துவ படிப்பில் சேர நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் படிப்பில் சேரலாம் என்பதுதான். நடப்பாண்டில் முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கம், 14 பேர் 0, 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றனர். மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையில் உயர்த்தாது, கண்டிப்பாக குறைக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
The post நீட் தேர்வு தகுதியை குறைக்கிறதா? அதிகரிக்கிறதா?: பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி appeared first on Dinakaran.