×

ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை..!!

டெல்லி: ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 24,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை என கூறி வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

The post ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Karnataka government ,Committee ,Cauvery Management Authority ,Delhi ,Dinakaran ,
× RELATED திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக...