×

புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு: இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் அம்பலம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு அரசு துறைகளில் ரூ.28 கோடி அரசு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தணிக்கைத் துறை அறிக்கையில் 12 அரசு துறை நிறுவனங்களின் கணக்குகள் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளன.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் ஆனந்த்; 17 அமைப்புகள் குழுமங்கள் கணக்குகளை தராததை குறித்த புகாரும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். பல்வேறு அரசு துறைகளில் 322 பணிகளில் ரூ.28 கோடி அரசு பணம் கையாடல் செய்து இருப்பதாகவும் ஆனந்த் தெரிவித்தார். புதுச்சேரியில் 12 அரசுத்துறை நிறுவனங்களின் கணக்குகள் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதும் தணிக்கைத் துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

The post புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு: இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Puducherry government ,Indian Audit Department ,Puducherry ,Puducherry Government Departments ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு விழாவில் பரபரப்பு...