×

மூணாறு அரசு பேருந்து நிலையத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

மூணாறு, செப். 21: மூணாறில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் டிப்போவில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மையால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கேரளா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாதலங்களில் ஒன்றான மூணாறுக்கு தினந்தோறும் ஆயிரக் கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் மக்கள் வரை தொலைதூர பயணத்திற்க்காக பழைய மூணாறில் உள்ள கேரளா அரசு பஸ் டிப்போவை மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

இங்கிருந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும் தினசரி சேவைகள் மட்டுமின்றி சுற்றுலாவிற்காகவும் இங்குள்ள பேரூந்துகள் பயன்படுத்த படுகின்றன.கோடி கணக்கில் வருமானம் ஈட்டும் கே.எஸ்.ஆர்.டி.சி மூணாறு பஸ் டிப்போவில் அடிப்படை வசதிகள் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இங்கு உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் பேருந்து நிலையம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.இதனால் இரவு நேரத்தில் பஸ் டிப்போ இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. தொலைதூர பேருந்துகள் இரவு நேரத்திலும் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் மக்களின் நடமாட்டம் இங்கு எப்பொழுதுமே இருக்கும். இதனால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போதுமான வெளிச்சமின்மை காரணமாக இரவு நேர பயணிகளிடம் திருட்டு சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

எனவே, பேருந்து நிலையத்தில் உள்ள உயர்மின் கோபுர விளக்குகளை அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மூணாறு அரசு பேருந்து நிலையத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Munnar Government Bus Station ,Munnar ,KSRTC ,Dinakaran ,
× RELATED மூணாறு அருகே பரிதாபம்; செந்நாய்கள் தாக்கி 40 ஆடுகள் உயிரிழப்பு