×

7 அடி நல்ல பாம்பு மீட்பு

போடி, செப். 21: போடி கருப்பசாமி கோயில் தெருவில் விசுவாசம் என்பவர் ஒர்க் ஷாப் நடத்தி வருகின்றார். நேற்று மாலை இவரது கடைக்குள் 7 அடி நல்ல பாம்பு புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த போடி தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி பாம்பை பிடித்து வனத்திற்குள் விட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

The post 7 அடி நல்ல பாம்பு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Visyasam ,Bodi Karuppasamy Temple Street ,Dinakaran ,
× RELATED பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வெளியேறும் கழிவுநீர்