×

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் அக்டோபர் 12ம் தேதி நடக்கிறது

திருப்பூர், செப்.21: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் அடுத்த மாதம் 12ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் ஓய்வூதிய இயக்குனர் மற்றும் துறை அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்களை, இதுநாள் வரையிலும் கிடைக்கப்பெறாமல் இருப்பின் இது குறித்து தங்கள் குறைகளை பணியாற்றிய துறை சார்ந்த, எந்த அலுவலர் மூலம் குறைகளை நிவர்த்தி செய்யலாம் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு, மனுக்களை இரட்டை பிரதிகளில் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), இரண்டாவது தளம் அறை எண் 232 என்ற முகவரிக்கு வரும் 30-ம் தேதி மாலைக்குள் கிடைக்கும்படி நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பிவைக்க வேண்டும்.

மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுகிறவர்கள் அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க இயலாது. மேலும், ஓய்வூதியதாரர்கள் அவர்தம் கோரிக்கைகளை சங்க கடிதம் மூலம் அல்லாமல் நேரடியாக தெரிவிக்க வேண்டும். சங்க பிரதிநிதிகள் ஓய்வூதியர் சார்பாக அவர் தம் குறைகளை எடுத்துரைக்கலாம். இதில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் அக்டோபர் 12ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Collector of Tirupur District ,Kristhraj ,Tirupur District ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்