×

கமுதி அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: முளைப்பாரி சுமந்த பக்தர்கள்

கமுதி, செப். 21: கமுதி அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், திரளான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி சுமந்தனர். கமுதி அருகே அபிராமம்  நவசக்தி விநாயகர் கோயிலின் 31ம் ஆண்டு சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மின்னொளி அலங்கார தேரில் விநாயகர் ஊர்வலம்
நடைபெற்றது. ஊர்வலத்தின் முன்பாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து சென்றனர்.

அபிராமம் பேரூராட்சி தலைவரும், திமுக நகரச்செயலாளருமான ஜாகிர் உசேன் இவ்விழாவிற்கு
தலைமை தாங்கி, முளைப்பாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பின்னர் அங்கு மருதுபாண்டியர்கள் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். இந்த ஊர்வலம் வாண வேடிக்கை மற்றும் மேளதாளங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, கோயில் நிர்வாகி நாகராஜன் மற்றும் அகமுடையார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். ஊர்வலமாக சென்ற விநாயகருக்கு, திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். அவர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் தரப்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post கமுதி அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: முளைப்பாரி சுமந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi ,Kamudi ,Mulaipari ,Vinayagar ,Chaturthi ,Mulaipari.… ,Dinakaran ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பேரணி