×

ஊட்டி- பெந்தட்டி சாலையில் முட்புதர்கள் அகற்றம்

ஊட்டி, செப்.21: ஊட்டியில் இருந்து பெந்தட்டி செல்லும் சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மலை மாவட்டம் என்பதால் அனைத்து சாலைகளும் குறுகலாகவும் மற்றும் வளைந்து நெளிந்தும் காணப்படும். மேலும், சாலை ஓரங்களில் புதர் செடிகள் அதிகளவு வளர்ந்து வாகன ஓட்டுனர்களுக்கு இடையூறாக காணப்படும். இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அவ்வப்போது அகற்றி சாலையை சீரமைப்பது வழக்கம். எனினும் மலைப்பிரதேசம் என்பதால் இந்த முற்புதர்கள் வேகமாக வளர்ந்து சாலையை மறைத்து கொள்வது வழக்கம்.

இது போன்ற சமயங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில், ஊட்டியிலிருந்து பெந்தட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் இரு புறங்களிலும் முட்புதர்கள் வளர்ந்து வாகன ஓட்டுனர்களுக்கு இடையூறாக இருந்தது. இதனை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுனர் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறையினரை வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து இச்சாலையில் இரு புறங்களிலும் வளர்ந்து இருந்த முட்பதர்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

The post ஊட்டி- பெந்தட்டி சாலையில் முட்புதர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Ooty-Bentathi road ,Ooty ,Bentati ,Ooty-Bhentati road ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி...