×

பாலக்காடு அலநல்லூரில் மின் வாரிய ஊழியர் மர்ம மரணம்

பாலக்காடு, செப்.21: பாலக்காடு அலநல்லூரில் மின் வாரிய ஊழியர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பாவோட்டை சேர்ந்தவர் சஜீவன் (51). இவர் அலநல்லூர் மருத்துவமனை சந்திப்பு பகுதியில் வாடகை வீடு எடுத்து வசிக்கிறார். இவர் அலநல்லூர் மின் வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக பணி புரிகிறார். இந்நிலையில் இவர் குடியிருக்கும் வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இவற்றை கவனித்த அக்கம் பக்கத்தினர் வார்டு உறுப்பினருக்கும், போலீசாருக்கும் தகவலளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மன்னார்க்காடு போலீசார் விரைந்து வந்து சஜீவனின் வீட்டின் கதவை உடைத்து பார்க்கையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். உடனடியாக போலீசார் ஆய்வு மேற்கொண்டு சஜீவனின் உடலை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து மன்னார்க்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பாலக்காடு அலநல்லூரில் மின் வாரிய ஊழியர் மர்ம மரணம் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Alanallur, Palakkad ,Palakkad ,Alanallur, Palakkad. ,Kerala… ,Palakkad Alanallur ,
× RELATED சென்னையின் மின்தேவை 2,000 மெகாவாட்...