
மதுரை, செப்.21: சேலம் இளைஞரணி மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி ஒரு கோடி ரூபாய் நிதி அறிவித்தார். மதுரை ரிங்ரோட்டில் நேற்றிரவு நடந்த திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசும்போது, ‘‘எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் திமுக கட்டுப்பாட்டுடன் நடத்தும். வேலூர் முப்பெரும் விழாவை விட, டிச.17ல் சேலத்தில் நடக்கும் இளைஞரணி மாநாட்டை நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் நடத்த வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து இளைஞர்களை அதிகளவில் கட்சி நிர்வாகிகள் அழைத்து வரவேண்டும். இளைஞர்கள் கையில்தான் எதிர்காலம் உள்ளது எனவே, இம்மாநாடு சிறப்பாக நடைபெற எனது சார்பில் ரூ.ஒரு கோடி நிதி வழங்குகிறேன்’’ என்றார்.
The post சேலம் மாநாட்டிற்கு ரூ.1 கோடி நிதி appeared first on Dinakaran.