
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை வகித்தார். ஆணையர் பிரவின்குமார் முன்னிலை வகித்தார். இதில், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சுவிதாவிமல், துணை ஆணையாளர் தயாநிதி, நகர பொறியாளர் அரசு, மாநகர சுகாதார அலுவலர் வினோத்குமார், மாநகர திட்ட பொறியாளர் மாலதி செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார் கவுன்சிலர் இந்திராகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, அவனியாபுரம், திருநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கல்ந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதனை பெற்று கொண்ட மேயர் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவது குறித்தும் இதை அகற்ற நிரந்தர நடவடிக்கை கோரியும் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று அந்த இடத்தை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
The post மழை தண்ணீர் தேங்கும் ரயில்வே சுரங்கப்பாதை ஆய்வு appeared first on Dinakaran.