
- திருவாரூர் மாவட்டம்
- திருவாரூர்
- திருவாரூர்
- மாவட்டம்
- சமாஜ்வாடி
- சுரேஷ் குமார்
- திருவாரூர் மாவட்ட காவல் துறை
திருவாரூர், செப். 21: திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திருவாரூர் மாவட்ட காவல் துறையில் இயல்பு நிலையில் கழிவினம் செய்யப்பட்ட 10 நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் 2 என மொத்தம் 12 காவல் துறை வாகனங்கள் அடுத்த மாதம் 16ம் தேதி பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி அளவில் ஆயுதப்படை மைதானத்தில் இந்த ஏலம் நடைபெறும். ஏலத்தில் வைக்கப்படும் வாகனங்கள், முதல் நாளான 15ம் தேதி காலை 9 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரையில் ஏலதாரர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
எனவே ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 16ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை ரூ.ஆயிரம் முன் ைவப்புத் தொகையாக செலுத்தி ஏலம் எடுப்பதற்கு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஏலம் எடுத்தவர்கள் ஏல தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு எஸ்பி சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் காவல் துறை பயன்படுத்திய வாகனங்கள் அக்.16ல் ஏலம் appeared first on Dinakaran.