×

கோவிலடி ஊராட்சி பகுதிகளில் பயன்பாடின்றி புதரில் கிடக்கும் அடி பைப்புகள் இடம் மாற்றி அமைக்க கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளி, செப். 21: திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி ஊராட்சி பகுதிகளில் அடி பைப்புகள் பயன்பாடின்றி புதர்மண்டி கிடக்கிறது. கோவிலடி ஊராட்சிக்கு உட்பட்ட சுக்காம்பார், கோவிலடி, கல்லணை ஆகிய கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவிலடி முதல் கல்லணை வரை உள்ள பல்வேறு இடங்களில் அடி பைப் அமைக்கப்பட்டது. இந்த பைப் பொதுமக்களின் நலன்கருதியும், பாதசாரிகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்பட்டன. ஆனால் இந்த பைப்புகள் பொதுமக்களுக்கு பயன்படாமல் முட்புதர்களுக்கிடையே பரிதாபமாக காட்சியளிக்கிறது.

ஒரு சில பைப்புகள் துருபிடித்து வீனாகிவிட்டன. இப்படி யாருமே பயன்படுத்தாமல் வீணாக முட்புதர்களுக்குள் கிடக்கும் பைப்புகளை அடி பைப் இல்லாத பகுதிகளில் மாற்றி அமைக்க, ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோவிலடி ஊராட்சி பகுதிகளில் பயன்பாடின்றி புதரில் கிடக்கும் அடி பைப்புகள் இடம் மாற்றி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Koviladi Panchayat ,Thirukkadupalli ,Koviladi ,Thirukkatupalli ,Dinakaran ,
× RELATED கோவிலடி சிவன் கோயிலில் பெருஞ்சாந்தி பெருவிழா