×

கெட்டுப்போன கோழி இறைச்சி 150 கிலோ பறிமுதல் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளியில் ஊர்வலம் 106 விநாயகர் சிலைகள் ஆறுகளில் கரைப்பு

தஞ்சாவூர், செப்.21: தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளியில் 106 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறுகளில் கரைக்கப்பட்டன. தஞ்சாவூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு தஞ்சாவூர் நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி நாளிலேயே ஒருசில விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. நேற்று மாலை தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் இருந்து பல்வேறு இடங்களில்பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 82 விநாயகர் சிலைகள் நேற்று மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கீழ ராஜா வீதி, கரந்தை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வடவாற்றில் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி எஸ்பி ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நித்யா உள்ளிட்ட டிஎஸ்பிகள் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுபடுகை  லட்சுமி விநாயகர் கோவில் ,ஒன்பத் வேலி வரசித்தி விநாயகர் கோயில், மற்றும் செந்திலை, பூண்டி, நாகாச்சி, திருச்சடை வளந்தை, பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் நேற்று இரவு கரைத்தனர். தோகூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நத்தமங்கலம்,கச்சமங்கலம், கோவிலடி, பாதிரக்குடி, புதூர், திருச்சென்னம்பூண்டி, ஆகிய பகுதியில் உள்ள விநாயகர் சிலைகளை அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றிலும் ,பூதலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்திரக்குடி, நந்தவனப்பட்டி, விண்ணனூர்ப்பட்டி, நாச்சியார் பட்டி (2) ,மாறனேரி (2),கடம்பன்குடி (2) ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை வெண்ணாறு மற்றும் குடமுருட்டி ஆறுகளில் கரைத்தனர். திருக்காட்டுப்பள்ளி கல்லணை பூதலூர் பகுதிகளில் நேற்று 24 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

The post கெட்டுப்போன கோழி இறைச்சி 150 கிலோ பறிமுதல் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளியில் ஊர்வலம் 106 விநாயகர் சிலைகள் ஆறுகளில் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thirukkattupalli ,procession ,Ganesha ,Thirukkatupalli, Thanjavur ,Ganesha Chaturthi ,Thirukkatupalli ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி...