
- மாமேல்குடி வட்டார வள மையம்
- அறந்தாங்கி
- மாமேல்குடி வட்டார வள மையம்
- புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி
- மாமேல்குடி வட்டார வள மையம்
- தின மலர்
அறந்தாங்கி,செப்.21: மணமேல்குடி வட்டார வள மையத்தில் எண்ணும் எழுத்தும் முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் அறந்தாங்கி தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின் படி மணமேல்குடி வட்டார வள மையத்தில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான முன் திட்டமிடல் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கும் பணிமனை கூட்டம் ஆங்கில பாடத்திற்கு தொடங்கியது.
கூட்டத்திற்க்கு மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆங்கிலப்பாடத்திற்கான கருத்தாளர்கள் கலந்து கொண்டு இது நமது நேரம், மாணவர்களை ஆயத்தப்படுத்தும் செயல்பாடுகள், மின்அட்டைகளைக் கொண்டு எளிய முறையில் கற்பித்தலுக்கான உபகரணங்கள் தயாரித்தல் போன்ற கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பு பணியில் ஆசிரியர்கள் ரவி,கிரேஸி மேரி, நிலோபர் நிஷா மற்றும் உம்மு ஹபிபாதஸ்னிம் ஆகியோர் ஈடுபட்டனர். தொடர்ந்து கணிதம், தமிழ் பாடத்திற்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பு பணிமனை கூட்டம் நடைபெறும்.
The post மணமேல்குடி வட்டார வள மையத்தில் appeared first on Dinakaran.