×

பழங்கோட்டை பஞ்சாயத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி

கழுகுமலை, செப். 21: பழங்கோட்டை பஞ்சாயத்தில் தூய்மையே சேவை குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செப்.15 முதல் அக்.2ம் தேதி வரை தூய்மையே சேவை குப்பையில்லா இந்தியாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனுக்குட்பட்ட பழங்கோட்டை பஞ்சாயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ -மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பழங்கோட்டை பஞ். தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ளியில் தொடங்கிய பேரணி, பழங்கோட்டையில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் மற்றும் பஞ். பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பழங்கோட்டை பஞ்சாயத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Cleanliness service awareness ,Palangottai panchayat ,Kalkumalai ,Swachthye Seva Garbage Free India awareness rally ,Palankottai Panchayat ,Swachhate Seva Awareness Rally in ,Palangottai ,Panchayat ,
× RELATED கழுகுமலையில் சமுதாய நலக்கூட அடிக்கல் நாட்டுவிழா