×

குற்றாலத்தில் மீட்பு ஒத்திகை பயிற்சி

தென்காசி, செப்.21:குற்றாலம் மெயின் அருவி பகுதியில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடந்தது. தென்காசி மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின் படி குற்றாலம் பிரதான அருவியில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு வெள்ள காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை எவ்வாறு மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது வெள்ளத்தில் சிக்கிய நபர்களை கயிற்றின் மூலம் மீட்பது, ரோப் லேடர் மூலம் மீட்பது, பாறையின் இடுக்குகளில் சிக்கிய நபர்களை மீட்பது, முதலுதவி எவ்வாறு அளிப்பது போன்ற செயல் விளக்கம் தீயணைப்பு துறை கமோண்டோ வீரர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த், தென்காசி நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப்குமார், தென்காசி தாவில்தார் சுப்பையன், நிலைய அலுவலர் ரமேஷ், சிறப்பு நிலைய அலுவர்கள் கணேசன், ஜெயரத்தினகுமார், ஜெயபிரகாஷ்பாபு மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர்.

The post குற்றாலத்தில் மீட்பு ஒத்திகை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Fire Department ,Kutalam Main Falls ,Tenkasi District Fire Department ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...