×

தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம்

ராதாபுரம்,செப்.21:தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது. அருட் தந்தை ஜெபநாதன் திருக்கொடியை அர்ச்சித்தார். புதுக்கோட்டை பங்குத்தந்தை அருட்திரு லாரன்ஸ் மறையுரையாற்றினார். தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 10 நாடகள் திருவிழா நடைபெறுகிறது. 9ம் திருவிழாவான வருகிற 28ம் தேதி சிறப்பு மாலை ஆராதனை நடைபெறும். இரவு புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது. 10ம் திருவிழா அன்று காலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரால்ட்ரவி, உதவி பங்குத்தந்தை ஜாண்ரோஸ், அருட்சகோதரிகள், ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர். கொடியேற்ற விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

The post தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : St. Michael the Archangel Church Festival Flag ,Radhapuram ,Thegakkallikulam St. Michael the Archangel's Church festival flag ,Aruth ,Jebanathan ,Thirukkodi ,Pudukkottai ,Sanghyagallikulam St. Michael the Archangel Church Festival Flag Hoisting ,
× RELATED தலைமறைவாக இருந்த வாலிபர் கைது