×

அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு

ஓசூர், செப்.21: ஓசூர் மாநகராட்சி 23வது வார்டில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் நேரடி ஆய்வு மேற்கொண்டார். சூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் அமைந்துள்ளது. இதில் 23வது வார்டிற்கு உட்பட்ட பழைய ஏ.எஸ்.டி.சி அட்கோ பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், மேயர் சத்யா நேற்று பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாக்கடை பிரச்னை, குடிநீர் பிரச்னைகள் குறித்து வீடுகள் தோறும் பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, வட்ட செயலாளர் சுரேஷ், மற்றும் சுதா நாகராஜ், சுந்தர், ரமேஷ், ஜெயசீலன், தேவாரம், சேகர், கணேஷமூர்த்தி,சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Ward 23 ,Hosur Corporation ,Sur Corporation ,Dinakaran ,
× RELATED ஓசூர் மாநகராட்சியில் நாளை சிறப்பு முகாம்