×

சிறுமியை கடித்து கொன்றது இதுதானா? திருப்பதி மலைப்பாதையில் ஆறாவது சிறுத்தை சிக்கியது: உமிழ்நீர் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் 6வது சிறுத்தை நேற்று பிடிபட்டது. திருப்பதி மலைப்பாதையில் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி பெற்றோருடன் பாதயாத்திரை சென்ற ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லட்சிதா(6) என்ற சிறுமியை ஒரு சிறுத்தை கவ்விச் சென்று கடித்து கொன்றது. சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அந்த கூண்டில் அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் பிடிபட்டன. இதில் 4 சிறுத்தைகளில் முதலில் பிடிபட்ட 2 சிறுத்தைகள் சிறுமியை கடித்து கொல்லவில்லை என தெரிய வந்தது.

இதற்கிடையே மேலும் 5 சிறுத்தைகள் திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வருவது வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் தெரிய வந்தது. நேற்று காலை மேலும் ஒரு சிறுத்தை கூண்டில் பிடிபட்டது. இந்த சிறுத்தையை வனத்துறையினர் பலத்த பாதுகாப்புடன் பிடித்து திருப்பதி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். இந்த சிறுத்தையின் முடி, உமிழ்நீர் போன்றவை சேகரித்து மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். முடிவுகள் வந்த பிறகே சிறுமியை கடித்து கொன்றது எந்த சிறுத்தை என தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சிறுமியை கடித்து கொன்றது இதுதானா? திருப்பதி மலைப்பாதையில் ஆறாவது சிறுத்தை சிக்கியது: உமிழ்நீர் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Pass ,Padayatra ,Tirupati mountain pass ,Dinakaran ,
× RELATED திருப்பதிக்கு வரும் பிரதமரின் பாதுகாப்புக்கு வந்த டிஎஸ்பி பலி