×

ஸ்பெயின் நாட்டில் இருந்து முதல் சி-295 விமானம் வதோதரா வந்தது

புதுடெல்லி: ஸ்பெயின் நாட்டில் இருந்து முதல் சி 295 விமானம் இந்தியா வந்து சேர்ந்தது. இந்திய விமானப்படையில் சரக்கு போக்குவரத்து வசதிக்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள சி 295 விமானம்வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் ஸ்பேசுடன், இந்திய அரசு ரூ.21,935 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இதில் முதல் சி 295 விமானம் செப்.13ம் தேதி தெற்கு ஸ்பெயின் நகரமான செவில்லியில் இந்திய விமானப் படை தளபதி ஏர் சீப் மார்ஷல் விஆர் சவுத்திரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று குஜராத் மாநிலம் வதோதராவில் வந்து தரையிறங்கியது.

செப்டம்பர் 25ம் தேதி டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டனில் நடைபெறும் விழாவில் இந்த விமானம் முறையாக இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார். அதை தொடர்ந்து ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்பெயினின் ஏர்பஸ் 2025ம் ஆண்டுக்குள் செவில்லியில் இருந்து மேலும் 16 விமானங்களை வழங்கும். அதன் பிறகு 40 விமானங்கள் இந்தியாவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்படும். 2024 நவம்பரில் வதோதராவில் விமான தயாரிப்பு முழுமை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.

The post ஸ்பெயின் நாட்டில் இருந்து முதல் சி-295 விமானம் வதோதரா வந்தது appeared first on Dinakaran.

Tags : Spain ,Vadodara ,New Delhi ,India ,Indian Air Force ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி