×

ரயில் விபத்து நிவாரண தொகை 10 மடங்கு உயர்வு: ரயில்வே வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி: ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரயில் விபத்துகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் இறந்த மற்றும் காயமடைந்த பயணிகளின் உறவினர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை நிவாரணத் தொகையை இப்போது திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேனுவல் லெவல் கிராசிங் கேட் விபத்தில் ரயில்வேயின் முதன்மைப் பொறுப்பின் காரணமாக விபத்துக்குள்ளானவர்களுக்கு கூடுதல் கருணைத் தொகை நிவாரணம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா லெவல் கிராசிங் விபத்துகளில் இறந்த பயணிகளின் உறவினர்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இனிமேல் அந்த தொகை ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் ரூ.2.5 லட்சமும் வழங்கப்படும். சாதாரண காயம் உள்ள பயணிகளுக்கு முன்பு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. இனிமேல் 50,000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும் விரும்பத்தகாத சம்பவங்களான தீவிரவாத தாக்குதல், வன்முறை தாக்குதல் மற்றும் ரயிலில் கொள்ளை போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முன்பு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்த தொகை தற்போது ரூ.1.50 லட்மும், படுகாயமடைந்தவர்களுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.50 ஆயிரமும். காயம் அடைந்தவர்களுக்கு முன்பும், இப்போதும் ரூ.5,000 வழங்கப்படும்.

ரயில் விபத்துகள் ஏற்பட்டால் 30 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு 10 நாள் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தினத்திற்கு முன்பு வரை ஒவ்வொரு நாளும் ரூ.3 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும். விரும்பத்தகாத சம்பவத்தில் கடுமையான காயம் ஏற்பட்டால், ஒவ்வொரு 10-நாள் காலத்தின் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியின் முடிவில் ஒரு நாளைக்கு ரூ. 1,500 விடுவிக்கப்படும். மேலும் ஆறு மாதங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்து நிதி உதவி செய்யப்படும்.

அதன்பிறகு அடுத்த 5 மாதத்திற்கு ஒவ்வொரு 10 நாள் காலத்தின் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியின் முடிவில் ஒரு நாளைக்கு ரூ 750 நிதி வழங்கப்படும். ஆனால் ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து ஏற்பட்டால், அத்துமீறி நுழைபவர்க ளுக்கு எந்தவிதமான கருணைத் தொகையும் வழங்கப்படாது. இவ்வாறு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post ரயில் விபத்து நிவாரண தொகை 10 மடங்கு உயர்வு: ரயில்வே வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Railway Board ,New Delhi ,
× RELATED இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு...