×

ஆசிய விளையாட்டு போட்டி; மகளிர் டி20 காலிறுதியில் ஹாங்காங்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் மகளிர் டி20ல் மங்கோலியா அணியை 22 ரன்னில் சுருட்டி 180 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஹாங்காங் அணி காலிறுதிக்கு முன்னேறியது. முதல் போட்டியில் இந்தோனேசியா அணியிடம் 10 ஓவரில் 15 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்த மங்கோலியா தகுதிச்சுற்று காலிறுதியில் நேற்று ஹாங்காங் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற மங்கோலியா பந்துவீச… ஹாங்காங் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. கேப்டன் கேரி சான் 70 ரன், மிலேஸ் 30 ரன், சான் டு 30*, மரியம் பிபி 36* ரன் எடுத்தனர்.

அடுத்து 203 ரன் இலக்குடன் களமிறங்கிய மங்கோலியா 14.3 ஓவரில் 22 ரன்னுக்கு சுருண்டது (5 பேர் டக் அவுட்). 180 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்திய ஹாங்காங் காலிறுதிக்கு முன்னேறியது. மங்கோலியா தொடர்ச்சியாக 2 படுதோல்வியுடன் பரிதாபமாக வெளியேறியது. நாளை நடைபெறும் 4வது காலிறுதியில் ஹாங்காங் – வங்கதேசம் மோதுகின்றன.

The post ஆசிய விளையாட்டு போட்டி; மகளிர் டி20 காலிறுதியில் ஹாங்காங் appeared first on Dinakaran.

Tags : Asian Games Tournament ,Hong Kong ,Women's T20 quarter- ,Hangzhou ,women's T20 ,Asian Games series ,Mongolia ,Asian Games ,Hong ,Kong ,women's T20 quarter-finals ,Dinakaran ,
× RELATED சென்னை – ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை!