×

ஒருநாள் பந்துவீச்சு தரவரிசை; சிராஜ் மீண்டும் நம்பர் 1

துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில், இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் இலங்கைக்கு எதிராக ஒரே ஓவரில் 4 விக்கெட் உள்பட 21 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற சிராஜ், 694 புள்ளிகளுடன் ஒரேயடியாக 8 இடங்கள் முன்னேறி 2வது முறையாக நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பாக 2023 ஜனவரி-மார்ச் வரை அவர் முதலிடம் வகித்துள்ளார். இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 638 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளார்.

The post ஒருநாள் பந்துவீச்சு தரவரிசை; சிராஜ் மீண்டும் நம்பர் 1 appeared first on Dinakaran.

Tags : Siraj ,Dubai ,ICC ,Mohammad Siraj ,Dinakaran ,
× RELATED ஐசிசி சர்வதேச ஒருநாள் ஆடவர்...