×

ராணுவ தளவாடங்களை தயாரிப்பது குறித்து இந்தியா, அமெரிக்கா பேச்சு: பென்டகன் தகவல்

வாஷிங்டன்: ராணுவ தளவாடங்களை தயாரிப்பது குறித்து இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பென்டகன் பாதுகாப்பு செயலர் அலுவலகத்தின் தெற்காசிய கொள்கைக்கான இயக்குநர் சித்தார்த் ஐயர், “இந்தியாவுடன் பரஸ்பர கொள்முதல் ஒப்பந்தங்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உளவுத்துறை, கண்காணிப்பு உள்பட பல்வேறு ராணுவ கருவிகளை தயாரிப்பது குறித்து இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றன. பரஸ்பர பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தை உருவாக்கும் எங்கள் தீவிர முயற்சி பென்டகனின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று” இவ்வாறு தெரிவித்தார்.

The post ராணுவ தளவாடங்களை தயாரிப்பது குறித்து இந்தியா, அமெரிக்கா பேச்சு: பென்டகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,US ,Pentagon ,Washington ,United States ,America ,Dinakaran ,
× RELATED சீக்கிய தீவிரவாதியை கொல்ல இந்தியா...