×

அதிமுக மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவில் வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் வெங்கடாசலம் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்கீல்கள் ராஜ்மோகன், சூர்யா, இளவரசு, தருண்பாலாஜி, ராஜசேகர் ஆகியோர் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது 294 பி, 153ஏ, 504, 505(1)பி ஆகிய 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்ட முழுவதும் திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர்.

The post அதிமுக மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Kallakurichi ,Anna ,Kallakurichi Mantaiveli ,
× RELATED கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே...