×

உப்பு உற்பத்தி பாதிப்பு

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன.

அடிக்கடி பெய்து வரும் மழையால், உப்பு வாரும் நிலையில் இருந்த உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பு மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர்.

The post உப்பு உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tamil Nadu ,Delta ,
× RELATED வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க...