×

முதுநிலை நீட் கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம்: மருத்துவ கவுன்சிலிங் குழு அறிவிப்பு

சென்னை: முதுநிலை நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து மருத்துவ கவுன்சிலிங் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2023ம் ஆண்டுக்கான முதுநிலை படிப்பிற்குரிய கட்-ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்துள்ளது. இது அனைத்து வகைகளிலும் பொருந்தும். முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்காக புதிதாக பதிவு செய்பவர்கள் மற்றும் 3ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்பர்களுக்கும் மற்றும் தகுதி பெற்றவர்களுக்கும் மீண்டும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. புதியவர்கள் இதை பயன்படுத்தி 3ம் சுற்றும் கலந்தய்வில் பங்கேற்கலாம். ஏற்கனவே பதிவு செய்து இருப்பவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவை இல்லை. முதுநிலை படிப்பு 3ம் கட்ட கலந்தாய்வுற்கான அட்டவணை மருத்துவ கவுன்சிலிங் விரைவில் வெளியிடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post முதுநிலை நீட் கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம்: மருத்துவ கவுன்சிலிங் குழு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : medical ,Chennai ,Medical Counciling Committee ,Medical Counseling Committee ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் 49 இடங்களில் நடத்த...